அதிபரின் வாழ்த்து செய்தி

1991 ஆம் ஆண்டில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டஒரு சிறிய பாடசாலையே ப / அல் அமீன் மகா வித்தியாலயம். அப்பொழுது இப்பாடசாலை மிக சிறியதாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இப்பொழுது இப்பாடசாலை உயர்தரவகுப்புக்கள் எல்லாம் உள்ளடக்கியதாககாணப்படுகின்றது. இப்பாடசாலையில் தரம் 10 மாணவர்களால் விருப்பத்திர்க்கேற்ப தெரிவு செய்யப்பட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பவியல் பாடத்தில் முன்னெடுக்கப்பட்ட நவடிக்கையின் காரணமாக இப்பாட அலகு ஆசிரியரின் வழிகாட்டலுக்கு இனங்க மாணவர்கள் செயட்பட்டு எமது பாடசாலை பாற்றிய ஓர் முகப்பக்கத்தை உருவாக்கி உலகம் முழுவதும் அனைவரும் பார்வையிடும் வகையில் வலைத்தளத்தில் போடுவதற்கு தேவையான அனைத்து நடனடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதில் எமது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 10 மாணவர்கள் பெரும் பங்காற்றி தனது திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். இவர்களின் இம்முயற்சி வாழ்க்கைக்கு பெரும் முன்னேற்றம் ஒன்றை தரும் என நான் நம்முகிறேன். இவ்வேலைத்திட்டத்திற்குசைபர் லோவட பியாபத் வேலை திட்டத்தை நடைமுறை படுத்தும் domain.regestry.lk நிறுவனத்திற்கும் கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி திணைக்களம் மற்றும் இவ்வேலைத்திட்டத்திற்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகளைகளையும் , பாராட்டுக்களையும் தெரிந்து கொள்கின்றேன். இவ் வேலைத்திட்டத்தை உருவாக்கியதன் மூலம் பெரும் பயனை பெறுவோம் என்ற எதிர்பார்ப்புடன் கருதுகின்றேன் இப்படிக்கு இப்பாடசாலை அதிபர்
J.Noorul Arafa
B/Al Ameen Maha Vidyalaya