பாடசாலை வரலாறு

இந்து சமுத்திரத்தின் முத்தென வர்ணிக்கும் இலங்கை திரு நாட்டிலே எழில் கொஞ்சும் பதுளை மாவட்டத்தின் பசறை கல்வி வலயத்திட்குட்பட்ட லுணுகலை பிரதேசத்தில் பத்தினிகும்புற எனும் இடத்தை மையமாக கொண்டது ப / அல் அமீன் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலையானது 1991.09.16 அன்று ஆரம்பிக்கப்பட்டது. லுணுகலை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாக காணப்பட்ட இப்பாடசாலையின் தோற்றத்திட்கு காரண கர்த்தாவாக ஜனாப் அமீன் ஹாஜி முன்னைய அதிபர் ஹுசைன் பாரூக் ஹாஜி பரீட் இஸ்மாயில் ஜனாப் புஹார் ஆகியோர் திகழ்கின்றனர். ஆரம்பத்தில் நிரந்தர கட்டிடம் இன்றி பள்ளிவாயல் ஒரு பகுதியில் 38 மாணவர்களுடன் இயங்கத் தொடங்கியது. இக்கட்டிடத்தை வழங்கியமைக்கு பதுளை ஜனாப் முபாரக் ஹாஜி அவர்களை நன்றி மறக்க முடியாது. ஆரம்ப கால கட்டத்தில் சீருடை தளபாட வசதி என்பன இன்மையால் ஜனாப் மன்சூர், ஜனாப் ராசிக் பரீட் ஆகியோர் மாணவர்களுக்கு இலவச சீருடைகளை அன்பளிப்பு செய்தனர் தரம் 01 - 03 வரையான வகுப்புக்கள் மாத்திரமே இயங்கின. ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக ஜனாபா மஸாஹிரா அவர்களும் முதல் அதிபராக ஜனாபா ரஸீனா புஹார் அவர்களும் சுமார் 2 வருட காலம் பாடசாலையை நடாத்தி பங்களிப்பு செலுத்தினர். அதை தொடர்ந்து நிரந்தர கட்டிடம் , ஆசிரியர் பற்றாக்குறை என்பன தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை பெயரில் 1992 .08.21 சுமார் 2 ஏக்கர் காணியை ஒதுக்கி கட்டிடம் ஒன்றிட்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1992 ஆம் வருடத்தில் தரம் 04 ஆரம்பிக்கப்பட்டது. 62 மாணவர்களாக காணப்பட்டது அதை தொடர்து 1993. 09. 03 புதிய அதிபராக முசம்மில் அவர்கள் பாடசாலையை பொறுப்பேற்றார்.